Skip to content

வாட்ஸ் அப்-இன் துவக்குனர் வாழ்க்கை

January 1, 2016

 

ஜான் கோம்,  நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்-பின் முதன்மை இயக்குனரும் , துவக்குனரும் ஆவார். இவர் தனது நிறுவனத்தை பேஸ்புக்கிடம் 24பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றவர். 4 லட்சம் டாலர்களை வைத்து துவங்கப்பட்ட  ஒரு நிறவனத்தை, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.(2200 கோடி அமெரிக்க டாலர்). அண்மையில் 1987 கோடி ரூபாய்க்கு தனது பங்குகளை அரசுக்கு  வரி கட்டுவதற்காக விற்றவர்.

2009 இல், 4 லட்சம்  டாலர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2014இல் 24பில்லியன் என்றால், அது  நாம் பல படங்களில் பார்த்து ரசித்த (ஒரே பாடலில்)ரஜினியின் வளரச்சி போன்றது.

ஆனால் இதை இவர் எளிதில் அடைந்து விடவில்லை. தனது தந்தையை 1997 இலும், தாயை 2000 இலும் இழந்தவர். கம்யூனிச முற்றதிகாரத்தால்(Dictatorship) முற்றும் சிதையுண்ட உக்ரைனில் பிறந்தவர். அங்குள்ள குளிரை சமாளிக்க சுடு நீர் கூட இல்லாத நிலைமையில் தான் வளர்ந்துள்ளார். அங்கிருந்த யூத வெறுப்பு நிலையால், அவருடைய அம்மா, வீட்டில் இருந்த தொலைபேசியை பயன்படுத்த அச்சம் கொள்ள வேண்டிய நிலைமை.

அப்படியொரு மோசமான நிலையில் எப்படி இந்நிலையை அடைந்தார்? அங்குதான் காட்சிக்குள் அமெரிக்கா வருகிறது.

1992இல் தனது 16ஆவது அகவையில், தன் அம்மா, பாட்டியோடு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடிபெயர்ந்தார். தந்தை அவர்களோடு பின்னர் அமெரிக்கா வருவதாய் இருந்தது. அமெரிக்கா  வருவதற்குள், 1997இல் மரணம் தழுவினார். அவர் தாய் புற்று நோயால், 2000இல் இறந்தார்.ஜான் கோம்  வந்து குடியமர்ந்த புதிதில் பெரும்-பல்பொருள் அங்காடியில், சுத்தம் பணியாளராய்  இருந்துள்ளார்.அமெரிக்காவின் உணவு வில்லைகளையே (நம்மூர் ரேசன் கடை போன்றது)  உணவுக்காக நம்பியிருந்த நிலை.

பள்ளியில் பயிலும் போது, தனது 18  வயதில் கணினி நிரல்கள்(Computer Programs) எழுதுவதில் ஆர்வம் வர, பழைய புத்தகங்களை விற்கும் கடைகளில்,  மென்பொருள் நிரல்களை எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார்.  பின்னர் கல்லூரி பயிலும் போதே, எர்னஸ்ட் & யங்-கில் பணி செய்தார். ஒப்பந்த ஊழியனாக அப்போது மிக துவக்காகாலத்தில்  இருந்த யாகூவில் (YAHOO) இருந்தார். வெளிப்படையாக, மனதில் பட்டதை பூசி மொழுகாமல் பேசும் அவர் திறனைக் கண்டு அவருக்கு அங்கே வேலை செய்ய அழைப்பு வந்தது.அடுத்த எட்டு வருடங்கள் யாகூவிலேயே பணிபுரிந்தார். அங்கேதான் வாட்ஸ்ஆப்பின் கூட்டு துவக்காளர் பிரையன் ஆக்டனை சந்தித்தார்.

8 வருட யாகூ அனுபவத்திற்கு பிறகு நீண்ட விடுமுறையில் சென்றவர். பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்களிலும் வேலைக்காக விண்ணப்பித்தார். இரண்டிலும் வேலைக்கு தகுதியில்லை என திருப்பி அனுப்பப்பட்டவர். பின்னர் தனது சேமிப்பில் இருந்த 4 லட்சம் டாலர்களை வைத்து துவங்கப்பட்ட ஒரு சிறு திட்டப்பணியே வாட்ஸ்ஆப்பாக விரிவடைந்தது. இப்போது கிட்டத்தட்ட 90 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக்கோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தை, கையெழுத்திட்டது முகநூலின் தலைமைசெயலகத்திலோ வேறு பெரிய ஓட்டல்களிலோ அல்ல. தான் இலவச உணவுக்காக இளம் வயதில் காத்திருந்த  அதே ரேசன் கடையில்.

தான் மிக வருந்தக்கூடியதாக நிகழ்வாக அவர்குறிப்பிடுவது நீதிமன்றம் அவர் முன்னால் காதலி சார்பாக அவருக்கு விதித்த ‘தடைகுறி கட்டளை’(Restraining Order).  தன்வாழ்வில் கட்டாயம் அழிக்கப்படவேண்டிய பாகம் என ஒன்று இருந்தால், அது இந்நிகழ்வே என குறிப்பிட்டுள்ளார். அவர் காதல் உடைந்ததை  எற்றுக்கொள்ளாத மனநிலையில் செய்த மூடச்செயல்களே ‘தடைகுறி கட்டளை’க்கு காரணம் ஆகும்.

 

நன்றி:

விக்கிபீடியா, குவாரா

Daniel L Jacobs

கவிஞர் மகுடேசுவரன்

http://qr.ae/Rgpg4Z

குறிப்பு:

வாட்ஸ்ஆப் விற்கப்பட்ட தொகை, சில இடங்களில் 16 பில்லியன் என்றும், பல இடங்களில் 18 அல்லது 19 பில்லியன் என்றும் குறிப்பிடப்பட்ள்ளது. நான் குறிப்பிட்டுள்ள தொகை, நான் வாசித்த குவாரா பதிலில்  இருந்து எடுத்தது.

 

Advertisements
Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: